தமிழக முதல்வரின் உழவர் நல சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என ராசிபுரம் வட்டாரத் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இ.கார்த்திகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,:

தமிழக முதல்வரின் உழவர் நல சேவை மையம் அமைக்க தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் படிப்பு, பட்டய படிப்பு பயின்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த மையங்களில் வேளாண்மை தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண் விற்பனை தொடர்பான ஆலோசனைகள் வேளாண் இடுபொருள் விற்பனை வேளாண் எந்திர வாடகை மையம், விதைகள் , பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் வினியோகம் ,மண் மற்றும் நீர் மாதிரி ஆய்வு செய்ய உதவுதல், நுண்ணுயிர் பாசன திட்டம், ட்ரோன் சேவை, உழவர் கடன் அட்டை, கால்நடை தீவனம், வேளாண் எந்திரங்கள் பழுது பார்க்கும் பட்டறை, வேளாண் விளை பொருட்களின் மதிப்பு கூடுதல் போன்ற சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படும் . அக்ரிஸ்நெட் என்ற இணைதளத்தில் ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விரிவான திட்ட அறிக்கையுடன் உரிய வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். 30% மானியம் வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இடுபொருட்களை விற்பனை செய்ய தேவையான உரிமங்கள் இல்லாதவர்கள் இம்மானியத்திற்கு விண்ணப்பிக்கும் போதே உரிமம் பெறுவதற்கு உரிய கடிதங்களில் அக்ரிஸ்நெட் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். உழவர் நல சேவை மையங்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதிப்பீட்டில் தொடங்குபவர்களுக்கு 30% மானியம் அல்லது மூன்று லட்சம் முதல் 6 லட்சம் வரை வங்கிகளுக்கு அரசால் மானியம் விடுவிக்கப்படும். உழவர் நல சேவை மையம் தொடங்க விரும்புபவர்கள் ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





