Tuesday, October 14, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeதகவல்கள்தீயணைப்புத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீயணைப்புத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணி துறை சார்பாக ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் தீயணைப்பு மீட்புத்துறை சார்பில் வாங்க கற்றுக் கொள்வோம் என்ற நிகழ்ச்சியில் தீ பாதுகாப்பு அறிவோம் – உயிர்களை காப்போம் என்ற தலைப்பில் தீத்தடுப்பு செயல்பாடுகள் மற்றும் தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்டது. ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் வெ.பலகார ராமசாமி தலைமை வகித்தார்.

இதில் பொதுமக்கள், சிறுவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்களுக்கு சமையல் காஸ் தீ விபத்து, மின்கசிவு தீ விபத்து, பெட்ரோலிய பொருட்களினால் ஏற்படும் தீ விபத்து, வெள்ளம் பாதிப்பு, பருவ மழை காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, அவசர உதவிக்கு தீயணைப்புத் துறையை அழைப்பது போன்றவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நிலைய அலவலர்கள் பங்கேற்ற செய்முறை விளக்கமளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!