Tuesday, October 14, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்கரூரில் பள்ளி கட்டிடத்தை காணொளியில் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

கரூரில் பள்ளி கட்டிடத்தை காணொளியில் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, புன்னம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ரூ.55 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வுக் கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இளங்கோவன், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சக்திய பால கங்காதரண் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேலு, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!