Tuesday, October 7, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவியர் சந்திப்பு நிகழ்வு

ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவியர் சந்திப்பு நிகழ்வு

ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1975-76-ம் ஆண்டு பயின்ற மாணவியர் 45 பேர் பொன்விழா ஆண்டையொட்டி பள்ளியின் ஒன்று கூடி மாணவப் பருவத்தை நினைவு கூர்ந்து மகிழ்ந்து கொண்டாடினர்.

இதற்கான விழாவில் முன்னாள் மாணவி எஸ்.திரிபுர சுந்தரி வரவேற்றுப் பேசினார். என்.கே.வசந்தி தலைமை வகித்தார். தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜெ.பாபு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பின்னர் மாணவியர் 45 பேரும் தங்கள் தற்போதையை பணி, குடும்ப சூழல் குறித்து பகிர்ந்து கொண்டனர். மேலும் பள்ளி காலங்களில் விளையாடி மகிழ்ந்த பழைய நாட்களை நினைவு கூர்ந்து ஒருவருக்கொருவர் கூடி மகிழ்ந்தனர். மேலும் தங்களது பள்ளி ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசளித்து கெளரவித்தனர்.

மேலும், பள்ளி வளாகத்தில் பொன்விழா ஆண்டு நினைவு மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. பின்னர் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை எஸ்.திலகா, வி.லீலாவதி, ஜி.ராஜேஸ்வரி, என்.விஜயலட்சுமி, டி.அருள்மொழிதேவி, எஸ்.கண்மணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!