தமிழக அரசின் உத்தரவின் பேரில் செப்டம்பர் 6-ம் தேதி தமிழக காவலர் கொண்டாடப்படுகிறது. தமிழக காவல் துறை இயக்குநர் மற்றும் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ஆகியோர்களின் உத்தரவின் படியும்,
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின் படி,
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர் மற்றும் பொதுமக்கள் இணைந்து பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக இன்று 05.09.2025-ம் தேதி நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில காவலர்களுக்கான
இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர்.ஆர்.விஜயராகவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலிருந்து காவலர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டனர். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.விஜயராகவன் இணையவழி குற்றங்கள் குறித்தும் மற்றும்
கைபேசிகளை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்தும்
பேசினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட மருத்துவ கல்லூரி
மருத்துவமனை பொது மருத்துவர் டி.மோகன் உணவு முறை மற்றும்
மருத்துவம் ஆகியவற்றின் மூலமாக காவலா்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும்
பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மாவட்டத்தின் காவல் நிலையங்களை சார்ந்த காவல்துறையினர் பங்கேற்றனர்.





