ராசிபுரம் ரோட்டரி கிளப் ராயல் சார்பாக 75வது “சுதந்திர தின விழாவை” மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழா மாவட்ட தலைமை மருத்துவர் கே. கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

இதில் ராயல் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டு இனிப்புகள், உபகரணங்கள், நோயாளிகளுக்கு மற்றும் பொது மக்களுக்கும் வழங்கினார். இதில் தலைவர் ஹரிஹரன் செயலாளர் ,கார்த்திக் பொருளாளர் E R.S.சோமக்கண்ணன், ராயல் ரோட்டரி கிளப் மாவட்ட உதவி ஆளுநர் M. நந்தலால், முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர் A.ராஜு, முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள், ரோட்டரி ராயல் கிளப் உறுப்பினர்கள் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தலைமை செவியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் .இதில் “தொடர்ந்து பல்முறை ரத்ததானம் வழங்கி ஒய்வு பெற்ற தலைமை மருந்தாளுநர் ஏ.ராஜூவிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பொன்னாடை,சீல்ட் வழங்கப்பட்டது. முடிவில் செவிலியர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.