ராசிபுரம் அருகேயுள்ள வடுகம்முனியப்பன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ராசிபுரம் கிங்ஸ் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில், பள்ளியின் தலைமையாசிரியர் பி.சித்ரா தலைமை வகித்தார். கிங்ஸ் அரிமா சங்கத் தலைவர் எஸ்.சுப்ரமணி தேசியக்கொடியேற்றி வைத்துப் பேசினார். மேலும் விழாவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், பரிசு பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது. அரிமா மாவட்டத்தின் உடனடி முன்னாள் ஆளுநர் என்.பி. செந்தில்குமார், மாவட்ட பயிற்றுனர் இனியவன் எஸ்.இளங்கோவன், வட்டார ஒருங்கிணைப்பாளர் என்.மோகன் குமார், வட்டாரத் தலைவர் நெல்லை தனசேகர், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கோபி கிருஷ்ணன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
கிங்ஸ் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தினவிழா
RELATED ARTICLES