சென்னை: புதிய KYC செயல்முறை விரைவில் வங்கிகள் மூலம் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கி கணக்குகள் மற்றும் கணக்கு வைத்திருப்பவர்களை அடையாளம் காண கூடுதல் சரிபார்ப்பு அடுக்குகளைச் சேர்ப்பதன் மூலம் வங்கிகள் தங்கள் KYC (வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும்முறை ) தரநிலைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.
இந்த புதிய முயற்சி குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் அரசுடன் வங்கிகள் சார்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஏற்கனவே உள்ள அனைத்து கணக்குகளையும் புதுப்பித்தல் அடங்கும், குறிப்பாக ஒரே தொலைபேசி எண் பல அல்லது கூட்டு கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய KYC கேட்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது ஏற்கனவே வங்கி கணக்கு உள்ளவர்களுக்கும் கூட KYC சோதனைகள் செய்யப்படும். அவர்களிடம் கூடுதல் விவரங்கள் கேட்கப்படும். ஏற்கனவே வங்கி கணக்குகளை தொடங்க ஆதார், பான் கார்டு, போன் எண், போட்டோ அவசியம். இந்த நிலையில் கூடுதல் KYC களை வாங்க வங்கிகள் திட்டமிட்டு உள்ளன. கூடுதலாக, வெவ்வேறு ஆவணங்களைப் பயன்படுத்தி திறக்கப்பட்ட பல கணக்குகளைக் கொண்ட தனிநபர்களிடமிருந்து கூடுதல் KYC களை வாங்க வங்கிகள் திட்டமிட்டு உள்ளன. ஆதார், பான் கார்டு, போன் எண், போட்டோ அல்லாமல் கூடுதலாக சில வசதிகளை சேர்க்க வங்கிகள் ஆலோசனைகள் செய்து வருகின்றன. பான் கார்டு; அதேபோல் மார்ச் மாதத்தில் நாடு முழுக்க பான் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம். இனி பான் கார்டு வாங்குவதற்கான விதிகளில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். வருமான வரித் துறையானது நிரந்தர கணக்கு எண்ணை PAN கார்டு என்ற பெயரில் எல்லோருக்கும் வழங்கி வருகிறது. நம்முடைய அனைத்து வங்கி, பண பரிவர்த்தனைகளை கணக்கில் எடுக்க, கண்காணிக்க, அலச இந்த பாண் எண் அவசியம் ஆகும்
இதை வங்கி கணக்குடன் கட்டாயமாக இணைக்க வேண்டும். அதே போல் ஆதார் அட்டையுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. இது ஒரு தனித்துவமான 10 இலக்க எண்ணெழுத்து எண்ணாகும். அனைத்து வரி செலுத்துவோருக்கும் பான் கார்டு கட்டாயம். பான் கார்டு முக்கியம்: நாம் வைத்து இருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்றாக பான் கார்டு அட்டையும் மாறிவிட்டது. பான் அட்டை பயன்படுத்துவதன் மூலம்தான் வங்கி தொடர்பான பல சேவைகளை நாம் பெற முடிகிறது. நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதலில் 1 வருடம் அவகாசம். பின்னர் கூடுதலாக 6 மாதம் அவகாசம். அதன்பின் கடந்த மார்ச் வரை 500 ரூபாய் அபராதத்துடன் அவகாசம், பின்னர் ஜூன் இறுதிவரை 1000 ரூபாய் அபராதத்துடன் அவகாசம் வழங்கப்பட்டது.
லோன் எடுக்க, வருமான வரி தாக்கல் செய்வது, வங்கியில் அதிக அளவு பண பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்களுக்கு பான்கார்டு அவசியம். நம் வரவு செலவு அனைத்தும் இதன் மூலமே கண்காணிக்கப்படுகிறது. இதற்காக கால அவகாசம் ஏற்கனவே பல முறை நீட்டிக்கப்பட்டுவிட்டது. பல முறை இந்த அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2023 ஜூன் 30ம் தேதியுடன் இதற்கான அவகாசம் முடிந்துவிட்டது. அதற்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இணைக்காதவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. முடக்கம்: அதன் ஒரு கட்டமாக ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் 57.25கோடி பேர்ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளனர். ஆனால் மொத்தமாக 70.24 கோடி பேர் பான் கார்டு வைத்துள்ளனர். மீதம் உள்ள 11.5 கோடி பேரின் பான் கார்டுகள் இணைக்கப்படவில்லை என்பதால் இவர்களின் பான் கார்டு மொத்தமாக முடக்கப்பட்டு உள்ளது. பலமுறை கால அவகாசம் கொடுத்தும் கூட இவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளவில்லை என்பதால் அவர்களின் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது.