நடிகர் சூர்யாவின் 50- வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராசிபுரத்தில் ரத்ததானம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் ரசிகர் மன்றத்தின் ராசிபுரம் தொகுதி பொறுப்பாளர் மோகன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். முன்னதாக ஸ்ரீ ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நகர நிர்வாகிகள் ஜீவா, ஸ்ரீதர், பிரபு, ராமன்,சபரி,ஆனந்த் மணிவேல், ஜெகதீப் உள்ளிட்டஒன்றிய நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.