வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என பாஜக மாநிலத் தலைவரும்,சேலம் போட்ட பொருளாளருமான கே.பி.ராமலிங்கம் குறிப்பிட்டார்.
நாமக்கல் -திருச்செங்கோடு சாலையில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்ட அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா, பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் கே.பி.சரவணன், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், பரமத்திவேலூர் எம்எல்ஏ., எஸ்.சேகர், முன்னாள் எம்எல்ஏ., கே.பி.பி. பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இரு கட்சி நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு பின்னர், முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மக்களைக் காப்போம்- தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணத்தை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ளார். இதற்கு பொதுமக்களிடம் நல்ல ஆதரவு உள்ளது. இதனை பார்த்தால் அடுத்த 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக -பாஜக கூட்டணி வெற்றி பெறும். திமுக கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்கள் நலனைப் பற்றி கவலை படாலம் ஆட்சி செய்கிறார். இனி மக்கள் அவரை ஏற்கதயாராக இல்லை. அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால் அதிமுக கூட்டணியை விமர்சிக்கிறார் என்றார்.

தொடர்ந்து பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக சட்டசபை தேர்தலில், தொகுதி ஒதுக்கீடு எடப்பாடி தான் முடிவு செய்வார். இன்னும் பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்து பேச உள்ளேன். தலித் சமுதாயத்தின் அறிவுசார் தலைவராக உள்ள அவரை பின்பற்றுகிற இளைஞர்கள் தவறான பாதையில் சென்று விடக்கூடாது என்ற வகையில் அவரிடம் பேசுவேன். திமுக கூட்டணி அவர் இருப்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு அவர் செய்யும் துரோகம். பாஜக தாழ்த்தப்பட்டோருக்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். பாமக ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருப்பதாக தெரிவித்துள்ளது என்றார்.