நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியில் ஒரணியில் திமுக உறுப்பினர் சேர்க்கை திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் சேர்க்கை பணியில் திமுக இளைஞரணியின் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கையை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஜூலை.1-இல் தொடங்கி வைத்தார். இதனையடுத்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநி்லங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் உத்தரவின் பேரில் அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் கட்சி நிர்வாகிகள், இளைஞரணி உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகளும் மாவட்டம் முழுவதும் இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓரணியில் தமிழ்நாடு, என்ற திமுக உறுப்பினர் சேர்க்கை பணியில் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 45 நாட்கள் வீடு வீடாகச் சென்று, 30 சதவீதம் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணியை மேற்கொள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மா.கார்த்திக் வீடு வீடாக சென்று கழகத்தின் 4 ஆண்டு சாதனையை எடுத்துக்கூறி, ஓரணியில் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டார்.
நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூர் பகுதி பொருப்பாளராக உள்ள இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மா.கார்த்திக் தலைமையில், பாகம் எண் 12 முதல் 21 வரை வீடு வீடாக சென்று கட்சியின் 4 – ஆண்டு சாதனையை எடுத்து சொல்லி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர். இப்பணியின்போது, நாமகிரிப்பேட்டை பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், சேந்தமங்கலம் தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் தாமரைக்கண்ணன், தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் கஜேந்திரன், மணி, சந்தோஷ், வினோத், பூபாலன், கிஷோர் குமார், வினோத் ஆகியோர் உடன் இருந்தனர்.