தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி நிறுவனர் நல்வினை செல்வன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக சுமார் 12,000 பேர் மிகக் குறைந்த மாத சம்பளமாக ரூபாய் 12500 மட்டும் பெற்றுக் கொண்டு கடந்த 13 வருடங்களாக மிக ஏழ்மை நிலையில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இன்றைக்கு உள்ள சமூக -பொருளாதார சிக்கலான சூழ்நிலையில் மிக குறைவான மாத சம்பளத்தில் பகுதி ஆசிரியர்கள் பணியாற்றி வருவது என்பது அவர்களின் குடும்ப வாழ்வதற்கு போதுமான இல்லை என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசானது உணர்ந்து ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து நியாயமான மாத சம்பளம் வழங்க வேண்டும்.
கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என அறிவித்து இன்றோடு நான்காண்டுகள் முடிவுற்ற நிலையில், இனிமேலும் காலம் தாழ்தாமல் தமிழக முதல்வர் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.