Tuesday, July 15, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் சிறந்த சமுதாய செயல்பாடுகளுக்கு 27 விருதுகள் வழங்கி கெளரவிப்பு

ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் சிறந்த சமுதாய செயல்பாடுகளுக்கு 27 விருதுகள் வழங்கி கெளரவிப்பு

ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் 2024-25-ம் ஆண்டின் சிறந்த சமுதாய சேவை செயல்பாட்டிற்கு 27 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. ரோட்டரி சங்கங்களுக்கிடையே சிறந்த சமுதாய சேவை பாராட்டி ஆண்டு தோறும் ரோட்டம் மாவட்டம் சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது. சேலம், நாமக்கல்,தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய ரோட்டரி மாவட்டம்-2982 -ன் கீழ் 90 சங்கங்கள் உள்ளன. இதில் சிறந்த சங்கமாக ராசிபுரம் ரோட்டரி சங்கம் தேர்வு செய்யப்பட்டு அதிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

போலியோ ஒழிப்பு பணி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, அறக்கட்டளை நன்கொடை அளிப்பு, கல்விச்சேவை, மருத்துவ சேவை உள்ளிட்ட சேவைகளை பாராட்டி ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தம் தலைமையிலான ராசிபுரம் ரோட்டரி சங்கத்துக்கு 21 விருதுகள், 6 தனிநபர் விருதுகள் என மொத்தம் 27 விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் ரோட்டரி சங்கத்தின் தலைவர் எம்.முருகானந்தம் பணிகளை பாராட்டி ரோட்டரியின் சுப்ரீம் ஸ்டார் தலைவர் என்ற தனி நபர் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டார். சேலம் ரேட்டிசன் ஹோட்டலில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் வி.சிவக்குமார் தலைமையில் அண்மையில் நடைபெற்ற அவார்ட்ஸ் நைட் என்ற விருதுகள் வழங்கும் விழாவில், இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இதே போல் ரோட்டரி நிர்வாகிகள் அம்மன் ஆர்.ரவி (எ) திருமூர்த்தி, கே.எஸ்.கருணாகரபன்னீர்செல்வம், எஸ்.சத்தியமூர்த்தி, என்.பி.ராமசாமி, எஸ்.பிரகாஷ் ஆகியோருக்கும் தனி நபர் விருதும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு மாவட்டத்தினஅ ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!