Namakkal Best police station | மாநில அளவில் சிறந்த காவல் நிலையத்திற்கான 2ஆம் இடம் நாமக்கல் காவல் நிலையம் பெற்றுள்ளது.
மாநில அளவில் சிறந்த காவல் நிலையத்திற்கான 2 ஆம் இடம் பெற்றுள்ள, நாமக்கல் காவல் நிலையத்திற்கு தமிழக முதல்வர் கோப்பை வழங்கி பாராட்டினார்.
நாமக்கல் நகர காவல்நிலையம், நாமக்கல் திருச்சி மெயின் ரோட்டில் இயங்கி வருகிறது. தமிழக அரசின் காவல்துறை, செயல்பாடுகளின் அடிப்படையில், மாநில அளவில் சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்தது. அதில் நாமக்கல் காவல் நிலையம், தமிழ்நாட்டில் உள்ள சிறப்பான காவல்நிலையங்களில் சிறந்த காவல் நிலையமாக, மாநில அளவில் 2 ஆம் இடம் பெற்றுள்ளது.
சென்னையில் நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவில், 2023-ம் ஆண்டிற்கான ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையமாக, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற, நாமக்கல் நகர காவல் நிலையத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கோப்பை வழங்கி பெருமைப்படுத்தினார் .நாமக்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் பாராட்டு தெரிவித்தார்.