திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் 

158

Tiruchengode Arthanareeswarar Temple | ஆண்பாதி பெண் பாதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஸ்தல வரலாறு குறித்து தெரிந்த கொள்ளலாம்.

அர்த்தநாரீஸ்வரர் கோவில் வரலாறு

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் ஆலயத்தில் சிவன் தனது உடலின் சரிபாதியை உமையவளுக்கு தந்து, அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு அருளக்கூடிய ஸ்தலம் தான் திருச்செங்கோடு.

நாமக்கல்லில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில். திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவஸ்தலமாக இக்கோயில் திகழ்கிறது. தேவாரப் பதிகங்களில் ‘கொடிமாடச் செங்குன்றூர்’ என்று பாடப்பெற்ற சிவஸ்தலம், தற்போது ‘திருச்செங்கோடு’ என்று அழைக்கப்படுவதாக வரலாறு உண்டு. இறைவனுக்கு அர்த்தநாரீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு பாகம் பிரியாள் என்றும் பெயர் பெற்று விளங்கி வருகிறது.

செங்கோட்டு வேலவர் எனப்படும் முருகனுக்கு தனி சன்னிதி இக்கோயிலில் அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது பெண் போல தோற்றம் அளிக்கிறது. இத்தலத்தின் தீர்த்தம்- தேவ தீர்த்தமாக கருதப்படுகிறது. இத்தல மரமாக இலுப்பை மரம் உள்ளது. இது விறன்மிண்ட நாயனார் அவதாரத் தலம் ஆகும்.