Thursday, April 17, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்குமாரபாளையம் தளபதி அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

குமாரபாளையம் தளபதி அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

குமாரபாளையம் தளபதி அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. குமாரபாளையம் தளபதி அரிமா சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சேவ் சைட் பவுண்டேசன், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், உலக சமூக பொருளாதார அறக்கட்டளை, ஈரோடு அரசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் 140 பேர் பங்கேற்றனர். ஐ.ஓ.எல். லென்ஸ் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு 22 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கண்ணில் புரை உண்டாகுதல், மாறுகண், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், கிட்ட, தூரப்பார்வை, ஆகியவை இலவசமாக பரிசோதிக்கப்பட்டன. சங்க தலைவர் கதிர்வேல், செயலர்கள் சிவராமன், கோகுல்நாத், பொருளர் செல்வராஜ், நில முகவர்கள் நலச்சங்க தலைவர் சின்னுசாமி, மாவட்ட உணவு வழங்கல் துறை நிர்வாகி சண்முகசுந்தரம், உள்பட பலர் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!