நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
வையப்பமலை மரப்பரை அங்காளம்மன் கோவில் முறை உரிமை தொடர்பாக இரு தரப்பில் பிரச்சனை இருந்து வரும் நிலையில், எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகார் உள்ளது.

இது தொடர்பாக எலச்சிபாளையம் காவல்துறையினர் எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை என, பாதிக்கப்பட்ட நித்தியானந்த் என்பவர் ஏற்கனவே எலச்சிபாளையம் காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
மேலும் நித்தியானந்த் காவல் நிலையப் பகுதியில் நடைபெறும் சந்துக்கடை உள்ளிட்ட பல முறை கேடுகளையும் சுட்டி காட்டியதாகவும், கோவில் முறை உரிமை பிரச்சனையில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையிடம் வற்புறுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில் எலச்சிபாளையம் காவல்துறையினர் நித்யானந்த் மீதும் வழக்கு பதிவு செய்து உள்ளார்களாம். காவல் நிலையம் வந்து ஆஜாராகும் படியும் வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதனையடுத்து காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு மிரட்டுவதாகவும், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாகவும் கூறுகிறார். இதில் தனக்கு நியாயம் வேண்டுமென கோரி நித்தியானந்தன் திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.