தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஜல்லிக்கட்டு போட்டி மங்களபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை ஒன்றியத் திமுக சார்பில் நடைபெற்ற இப்போட்டியினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமகிரிப்பேட்டை ஒன்றியத் திமுக செயலாளருமான கே.பி.ராமசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

போட்டியில் சேலம், நாமக்கல்,திருச்சி, கரூர்,தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் அடக்கினார். மேலும் மாடுபிடி வீரர்களுக்கு எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியினல் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மருத்துவக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளி,சில்வர், மிக்ஸி,கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியே காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.