Wednesday, March 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் அருகே வழி தவறி வந்து கிணற்றில் விழுந்த மான்கள் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே வழி தவறி வந்து கிணற்றில் விழுந்த மான்கள் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே மலைப்பகுதியில் இருந்து வழி தவறி வந்து கிணற்றில் தவறி விழுந்த இரு மான்களை தீயணைப்பு துறையினர் உயிரிழந்த நிலையில் மீட்டனர்.

ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையையொட்டி அலவாய்மலை அடிவாரப்பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் என்பவரது மனைவி ராஜம்மாள் (70). இவருக்குசொந்த விவசாய கிணற்றில் மலைப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த இரு புள்ளி மான்கள் தவறி விழுந்துள்ளது. இது குறித்து ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து பார்த்தபோது 50 அடி ஆழமும் அதில் 10 அடி தண்ணீர் இருந்த கிணற்றில் விழுந்த மான்கள் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் உயிரிழந்த நிலையில் இருந்த இரு மான்களை மீட்டனர். இந்த மான்கள் வனத்துறை அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!