ராசிபுரம் நகர அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட்டது. நகரில் உள்ள 27 வார்டுகளிலும் ஜெயலலிதா திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடினர்.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகர அதிமுக செயலர் எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பட்டாசு வெடித்து பிறந்த தினவிழாவினை கொண்டாடினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு வார்டுகளிலும் பிறந்த தினவிழா நடைபெற்றது. ராசிபுரம் ஒருங்கிணைந்து நீதிமன்ற வளாகம் முன்பு அரசு வழக்கறிஞர் தங்கதுரை தலைமையில் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.