பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகம் சார்பில் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி போட்டி புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு ,கேரளா ,ஆந்திரா, தெலுங்கானா ,கர்நாடகா ஆகிய 6 மாநில மாணவர்கள் கலந்து கொண்டனர் .
இந்த போட்டியில் ராசிபுரம் இரா. புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் கே.தீபக் ஒன்பதாம் வகுப்பு தனி பிரிவு அறிவியல் கண்காட்சி போட்டியில் தென்னிந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எஸ் .சபரி, எஸ். ஜீவித்குமார் ஆகிய இருவரும் குழு அறிவியல் கண்காட்சியில் சிறப்பு பரிசு பெற்றுள்ளார்கள் . இவர்கள் ஏற்கனவே திருச்சியில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி போட்டியில் முதல் இடம் பிடித்து, தமிழக பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய அளவில் நம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றது மிகவும் பெருமைக்குரியதாகவும், மற்றும் போற்றுதலுக்குரியதாகவும், அரசு பள்ளி மாணவர்களிடம் உள்ள திறமைகளை தென்னிந்திய அளவில் வெற்றி பெற்ற இரா. புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களையும் , பள்ளி தலைமை ஆசிரியர் வ.அர்த்தனாரி அவர்களையும், இளம் விஞ்ஞானிகளை உருவாக்கிய ஆசிரியர்கள் து.முத்துக்குமார், மா. தினேஷ், கு. ராஜாமணி ஆகியோரையும் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி பரிசு வழங்கி பாராட்டினார்கள். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வே. கற்பகம் பள்ளி துணை ஆய்வாளர்கள் கை. பெரியசாமி சு.கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர் அ. சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.