Saturday, January 17, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் நகரில் ரோட்டரி - ஜேசிஐ அமைப்புகள் சார்பில் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம் நகரில் ரோட்டரி – ஜேசிஐ அமைப்புகள் சார்பில் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம் நகரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் புற்றுநோய் தடுப்பு மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராசிபுரம் இன்னர் வீல், ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ, ரோட்டரி சங்கங்கள், வாசவி கிளப், வனிதா கிளப் ஆகியவற்றின் சார்பில் இப்பேரணி நடத்தப்பட்டது.

முன்னதாக ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன்பாக துவங்கிய பேரணியை ராசிபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கவிதா சங்கர் கொடியேசத்து துவக்கி வைத்தார். பேரணி கச்சேரி வீதி, பழைய பஸ் நிலையம் , கவரை தெரு, கடைவீதி, ஆத்தூர் சாலை, புதிய பஸ் நிலையம் என நகரின் முக்கிய சாலைகள் வழியாக அண்ணா சாலை அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் சென்றடைந்தது. பேரணியில் பங்கேற்ற முத்தாயம்மாள், ஞானமணி கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவியர்கள் புற்றுநோய் தடுப்பு குறித்தும் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பு ஊசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு பேரணியில் சென்றனர்.

இதில் இன்னர்வீல் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் தெய்வானை ராமசாமி, ராசிபுரம் இன்னர்வீல் சங்கச் செயலர் சிவலீலஜோதி, ஜேசிஐ மெட்ரோ தலைவர் மணிமேகலை தமிழரசன், ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தம், செயலர் கே.ராமசாமி, இ.என்.சுரேந்திரன், ரோட்டரி கிளப் ஆப் ராயல் தலைவர் எம்.பூபாலன், ரோட்டரி கிளப் ஆப் எஜூகேசனல் சிட்டி தலைவர் திருமுருகன், வனிதா கிளப் தலைவர் பூர்ணிமா, ஜேசிஐ., பூபதி, கார்த்திக் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!