Wednesday, March 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்

குமாரபாளையத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் பழனிவேல் தலைமையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நூற்றுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு வீட்டு மனைகள் வழங்க முடிவு செய்யப்பட்டு நான்கு மாதங்கள் கடந்தும் இதுவரை வீட்டுமனை பட்டாக்கள் வழங்காமல் இருப்பதை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெயருக்காக நடத்தப்படும் முகாம்களின் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்படுவது தவிர்த்து, அனைத்து நாட்களில் மாற்றுத்திறனாளிகள் மனுக்களை பெற்று உபகரணங்கள் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் இறந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் மாற்றுத்திறனாளிகள் உயிரிழப்பு ஏற்படும் அன்றே வழங்க வேண்டும், ஆனால் அது தற்போது ஒரு ஆண்டுகள் கடந்து வழங்கப்படுவதை தவிர்க்க வேண்டும், என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாவட்ட தலைவர் பழனிவேல் கூறியதாவது:

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஆர்.டி.ஒ., தாசில்தார் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து, கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்கள். இலவச வீட்டுமனை பட்டா, பஸ் ஸ்டாண்டில் எங்களுக்கு கடை வாடைகைக்கு விடுவது ஆகியன மட்டும் 15 நாட்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!