ராசிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ராசிபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி ஆணையாளர் சூ.கணேசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் தேசியக் கொடியேற்றி வைத்தார். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் என பலரும் பங்கேற்றனர்.
ராசிபுரம் நகர காங்கிரஸ் சார்பில், நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.முரளி தலைமையில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. முன்னதாக காந்தி மாளிகை முன்பாக நடைபெற்ற விழாவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஏ.சித்திக் பங்கேற்று தேசியக்கொடியேற்றி வைத்துப் பேசினார். காந்தி மாளிகை ட்ரஸ்ட் போர்டு தலைவர் ஏ.என்.சண்முகம் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன் சிறப்புரையாற்றினார். முன்னதாக நகர்மன்ற உறுப்பினர் லலிதா பாலு வரவேற்றார். பின்னர் 20-வது வார்டில் கொடியேற்றப்பட்டது. இதில் வழக்குரைஞர் வி.சுந்தரம், டி.ஆர்.சண்முகம், பாலு, கே.டி.ராமலிங்கம், வடிவேல், பழனிசாமி, புதுப்பாளையம் பிரகஸ்பதி, மாணிக்கம், கோவிந்தராஜ், மாரிமுத்து, பாடகர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போல் ஆர்.புதுப்பாளையம் கிராம காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற விழாவில் கிராம காங்கிரஸ் தலைவர் ஏ.பிரகஸ்பதி கொடியேற்றி வைத்தார்.
இதே போல் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் அதன் தலைவர் எம்.முருகானந்தம் தலைமை வகித்து தேசியக்கொடியேற்றி வைத்தார். இதில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். பின்னர் பார்வையற்றோர் 70 பேருக்கு நலத்திட்ட உதவியாக சில்வர் பாத்திரங்களும், உணவும் வழங்கப்பட்டது.
கோல்டன் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவில் நா.குபேர்தாஸ் தலைமை வகித்தார். செயலர் ஆர்.இளங்கோ, பொருளாளர் ஆர்.டி.தில்லைக்கரசன், ஞானவேல், பிரவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்ஐசி ஆர்.விஸ்வநாதன் தேசியக் கொடியேற்றி வைத்தார். மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒ.செளதாபுரம் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் சங்கச் செயலர் அருணாசலம் தேசியக்கொடியேற்றி வைத்தார்.