ராசிபுரம் நகர 16வது வார்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 16வது நகர்மன்ற உறுப்பினர் லலிதா பாலு, மிஷின் பாலு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ராசிபுரம் பெரிய கடை வீதியில் பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் சிறுவர் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் 16வது வார்டு திமுக கிளைச்செயலாளர் பி.பூபதி உள்ளிட்ட வார்டு நிர்வாகிகள், திமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.
ராசிபுரம் 16-வது வார்டு திமுக சார்பில் சமத்துவப் பொங்கல்
RELATED ARTICLES