பாவை கல்வி நிறுவனங்களில் உள்ள ஆலயத்தில், ஸ்ரீவித்யா விநாயகர், ஸ்ரீவித்யா சரஸ்வதி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய தெய்வங்களுக்கு பதினொன்றாம் ஆண்டு ஸம்வஸ்ரா அபிஷேக விழா நடைபெற்றது. பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் விழாவிற்கு தலைமை தாங்கினார். தாளாளர் மங்கை நடராஜன் குத்து விளக்கேற்றி விழாவினைச் சிறப்பித்தார்.
தொடர்ந்து கல்வி தழைத்தோங்கவும், மாணவக் கண்மணிகள் நலமுடன் வாழவும், ஸ்ரீவித்யா விநாயகர், ஸ்ரீவித்யா சரஸ்வதி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய தெய்வங்களுக்கு விநாயகர் பூஜை, புண் யாகம், சங்கல்பம், கலச ஆவாஹனம், கணபதி ஹோமம், துர்க்கா சூக்த ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், மேதா சூக்த ஹோமம், சுதர்ஸன ஹோமம், பூர்ணாகுதி, சங்காபிஷேகம் ஆகிய தெய்வீக நிகழ்வுகள் நடைபெற்று அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவேறியது.
இந்த அபிஷேக விழாவானது மாணவ, மாணவிகள் நம் தமிழ் கலாச்சார, பண்பாட்டினை அறிந்து கொள்ளவும், அவர்களின் பக்தி நெறியினை வளர்க்கும் விதமாகவும் அமைந்தது.
இந்த ஸம்வஸ்ரா அபிஷே
க விழாவில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீவித்யா விநாயகர், ஸ்ரீவித்யா சரஸ்வதி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய தெய்வ அலங்காரங்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
பாவை கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் டி.ஆர்.மணிசேகரன், செயலாளர் டி.ஆர்.பழனிவேல், இணைச்செயலாளர் என்.பழனிவேல், இயக்குனர் (நிர்வாகம்) முனைவர். கே.கே.இராமசாமி, இயக்குநர் (சேர்க்கை) வழக்கறிஞர் கே.செந்தில், அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள், முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.