Wednesday, April 16, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeதகவல்கள்ராசிபுரம் பகுதி மக்களின் குறைகள் தீர்க்க வாய்ப்பு - டிச.18-ல் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட...

ராசிபுரம் பகுதி மக்களின் குறைகள் தீர்க்க வாய்ப்பு – டிச.18-ல் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம்

ராசிபுரம் தாலுகாவில் வருகிற டிச.18ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச.உமா தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவில் கிடைத்திட, தமிழக அரசால் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும், ஒரு நாள் குறிப்பிட்ட தாலுகாவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்து வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகாவில் வருகிற 18ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளது. ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிவரை. கலெக்டர் தலைமையில் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படுகிறது. பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!