Saturday, January 11, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஆன்மிகம்ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் கலச பூஜை

ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் கலச பூஜை

ராசிபுரம் ஸ்ரீநித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் 108 கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மழை வளம், கல்வி வளம் , விவசாயம் செழிக்க திருமண பாக்கியம், நவக்கிரகங்களின் நன்மை பெற, செல்வ வளம், ஆயுள் பலம், நாக தோஷம் நீங்க போன்ற பல்வேறு நன்மைகள் வேண்டி இந்த சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முன்னதாக ஸ்ரீ மகா கணபதி ஹோமமும், ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேகமும் பின்னர் அம்மனுக்கு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும் நடைபெற்றது.

இதில் திரளான பெண்கள் பங்கேற்று 108 கலசங்கள் வைத்து சிறப்பு கலச பூஜை வழிபாடுகள் நடத்தினர். மேலும் முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மன் சுவாமிக்கும் உற்சவருக்கும் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கலசத்தில் வைத்து பூஜை செய்த கலச நீரை ஊற்றி அபிஷேகங்கள் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

கார்த்திகை தீபத்திருநாளை தொடர்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சியளித்ததால் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள் செல்வம், ரவி ஆகியோர் செய்திருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!