நாமக்கல் மாவட்ட கல்வித்துறை சார்பில் பள்ளிசெல்லா இடை நின்ற மாணவ மாணவியர்கள் குறித்து ஆய்வு செய்யும் பணியில் கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப .மகேஸ்வரி உத்தரவின் படி பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளியில் சேர்ந்து பள்ளிக்கு வராமல் இடையில் நின்ற மாணவ மாணவியர் குறித்து இல்லம்தேடிச் சென்று ஆய்வுசெய்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளை சிறப்பு கவனம் செலுத்திட அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி தலைமையில் கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் சிறந்த பள்ளிகளுக்கும் சிறந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக குறிப்பிடப்பட்டது.
இதன்படி, கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அப்பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவியரை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று தற்போது இடைநிற்றல் இளமாறன் எனும் மாணவனை வெட்டுக்காடு பகுதிக்கு அவருடைய இல்லத்திற்கு சென்று மாணவனின் தந்தையிடம் பேசியதின் விளைவாக பள்ளிக்கு மீண்டும் அனுப்புவதாக உறுதியளித்துள்ளார்
இதனை தொடர்ந்து சேந்தமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட 58 பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப .மகேஸ்வரி , மாவட்ட கல்வி அலுவலர்கள் வே. கற்பகம், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜோதி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) பச்சமுத்து, சமக்கிரா திட்டத்தின் உதவி திட்ட அலுவலர்
பாஸ்கர், பள்ளித் துணை ஆய்வாளர் கை. பெரியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கீதா, சிந்துஜா , நந்தினி, சுமதி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழு இடை நின்ற மாணவ மாணவியரின் வீட்டிற்கு சென்று மீண்டும் படித்தல் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்….