ராசிபுரம் கவரைத்தெரு – கடைவீதி சந்திப்பில் ஜனநடமாட்டம் நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் 6 அடி நீள சாரைபாம்பு கடைக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
ராசிபுரம் கடைவீதி பகுதியில் வினோத்குமார் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை செயல்பட்டு வருகிறது. ஜனநாட்டம் மிகுந்த இப்பகுதியில் பட்டப்பகலில் செல்போன் கடையில் 6 அடி நீள சாரைப்பாம்பு புகுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர் இது குறித்து ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத்துறையினர் செல்போன் கடையில் பதுங்கியிருந்த 6 அடி நீள சாரைபாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் இந்த சாரைபாம்பு காப்புக்காடு பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.