Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்தமிழக முதல்வரை முற்றுகையிட போவதாக அறிவித்த 10க்கும் மேற்பட்டோர் கைது

தமிழக முதல்வரை முற்றுகையிட போவதாக அறிவித்த 10க்கும் மேற்பட்டோர் கைது

ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி டிச.9 ல் சென்னை கோட்டை முன்பு தமிழக முதல்வரை முற்றுகையிட போவதாக அறிவித்து சென்னை புறப்பட முயன்ற 10 க்கும் மேற்பட்டோர் ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ராசிபுரம் பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி, 10 ரூபாய் இயக்கம் போன்ற அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின.

இதேபோல் நாமக்கல் நகரில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை மீண்டும் அதே இடத்தில் செயல்பட வேண்டும்.

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்கு வழக்கமான பேருந்துகள் வந்து செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த அமைப்புகள் போராட்டங்கள்
நடத்தி வந்தன.

கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 9 அன்று நாமக்கல் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை முற்றுகையிட போவதாக பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நல்வினை விஸ்வராஜு அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்குரைஞர் நல்வினை விஷ்வராஜ் தலைமையில், 12 பேர் சென்னை செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து ராசிபுரம் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் ராசிபுரம் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!