ராசிபுரம் -மல்லூர் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் டிச.11-ல் மின்வினியோகம் இருக்காது என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.கே.சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராசிபுரம் துணை மின்நிலையத்தில் டிச.11-ல் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூர், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி, சிங்களாந்தபுரம், ஆர்.பட்டணம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
மல்லூர்: இதே போல் மல்லூர் துணை நிலையத்திலும் பராமரிப்பு நடைபெறுவதல், மல்லூர் நகர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, பாரப்பட்டு, ஒண்டியூர்,கீரனூர் வலசு, கீரனூர், நெ.3 கொமரபாளையம், பொன்பரப்பிப்பட்டி, அனந்தகவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, மின்னக்கல், ஜல்லூத்தூத்துப்பட்டி, அத்தனூர், ஆலாம்பட்டி, தேங்கல்பாளையம், கரடியானூர், அன்னாமலைப்பட்டி, தாளம்பள்ளம், உடுப்பத்தானபுதூர் ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் காலை 9 முதல் மாலை 5 வரை இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.