நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பஸ் நிலையத்தை அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டை முன்பாக முதலமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பத்து ரூபாய் இயக்கம் முடிவு செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பத்து ரூபாய் இயக்க உயர் மட்ட குழு குழு கூட்டம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் இயக்கத்தின் மாநில துனைப் பொது செயலாளர் க.சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் வழக்கறிஞர் க.சதீஸ்குமார் திருநின்றவூர் கே.பாஸ்கர் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் வழக்குரைஞர் நல்வினை விஸ்வராஜு சிறப்புரையாற்றிப் பேசினார். மாநில துணைப் பொது செயலாளர்கள் திருக்கோவிலூர் டேவிட் குமார், விருதுநகர் கண்ணன், நாமக்கல் மாவட்ட செயலாளர் பாலசுப்பரமணி, நாமக்கல் மாநகர் மாவட்ட செயலாலர் சுப்பிரமணியம், நாமக்கல் மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி, அனைத்து ஓட்டுநர் சங்க மாநில தலைவர் கு.பத்மராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஆன்லைன் மூலம் பயம்படுத்தும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கின்றோம் .
தமிழக அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் அரசு தருகின்ற இமெயில் முகவரியை ,மட்டுமே பயன்படுத்த வேண்டும் ஜிமெயில் போன்ற தனியார் இமெயில் முகவரியை ,பயன்படுத்த கூடாது என்ற சட்ட விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் மீறும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழ்நாடு தகவல் ஆணையம் தொடந்து மிகவும் மோசமாக செயல்பட்டு தகவல் உரிமை சட்ட நோக்கங்களுக்கு விரோதமக தகவல் மறுக்கும் ஆனையமாக செயல்பட்டு வருகின்றது. தகவல் ஆணையர்களை திருத்த பத்து ரூபாய் இயக்கம் தமிழநாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழுவுடன் இணைந்து தொடந்து பல்வேறு தொடர் போராட்டங்கள், நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. எதிர்வரும் 2025 ஜனவரி 5 -ல் இந்தியாவின் மிகவும் மோசமான தகவல் ஆணையம் என்ற விருது வழங்கும் விழாவை தமிழநாடு தகவல் ஆணைய சீரமைப்பு குழுவுடன் இணைந்து நடத்துவது என்றும் விருது பெற வருகை புரிய தகவல் ஆனையர்களை அழைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பேருந்து நிலையம் பொதுமக்களுக்கு பயன்படாத வகையில் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் நலனுக்காக மட்டுமே இடமாற்றம் செய்ய இராசிபுரம் நகராட்சி முயற்சி செய்து வருகின்றது. நாமக்கல் நகரில் இருந்த அரசு மருத்துவமனை முழுமையாக இடமாற்றம் செய்யப்பட்டு நாமக்கல் நகருக்கு 6 கிமீ வெளியே பேருந்து வசதி இல்லாத இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் நகர மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாமக்கல் புதிய பேருந்து நிலைய இடமாற்றம் செயல்பட ஆரம்பித்துள்ள நிலையில் நாமக்கல் நகர பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதால் நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் இராசிபுரம் நகர மக்கள் 100% முழுமையான கடையடைப்பு போராட்டம் நடத்தி பொது மக்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து நாமக்கல் மாவட்ட மக்கள் போராடி வரும் நிலையில் பொதுமக்கள் உணர்வுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதை தமிழக முதலல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் டிசம்பர் 11 ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் முன்பு தமிழ்நாடு முதல்வரை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.