Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்பொறியாளர் E.R.சுரேந்திரனுக்கு சாலை பாதுகாப்பு காவலன் விருது வழங்கல்

பொறியாளர் E.R.சுரேந்திரனுக்கு சாலை பாதுகாப்பு காவலன் விருது வழங்கல்

பல்வேறு பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சியளித்த பொறியாளருக்கு “சாலை பாதுகாப்பு காவலன்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

அசோக் லைலேண்ட் நிறுவனத்தில் பயிற்சி மேலாளராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்தவர் இ.என்.சுரேந்திரன். இவரது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒட்டுநர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் விதிமுறைகள் குறித்து பயிற்சியளித்து வருகிறார்.

இவர் பணியில் இருந்து விருப்ப ஒய்வு பெற்ற பின்னரும் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் மூலம் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான பயணம் என்ற தலைப்பில் சாலைப் பாதுகாப்பு குறித்தும், சாலை விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு பயிற்சியளித்து வருகிறார்.

இதுவரை லட்சக்கணக்கானோருக்கு சாலை பாதுகாப்பு, விதிமுறைகள் குறித்து பயிற்சியளித்துள்ளார். இந்நிலையில் இவரை பாராட்டி ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் இவருக்கு “சாலை பாதுகாப்பு காவலன்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. முன்னதாக விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ரோட்டரி லிட்டரசி கமிட்டி சேர்மேன் ஏ.வெங்கடேஸ்வரகுப்தா, ரோட்டரி செயலர் கே.ராமசாமி, கே.எஸ்.கருணாகரபன்னீர்செல்வம், ரோட்டரி உதவி ஆளுநர் கு.பாரதி, இன்னர்வீல் சங்கத் தலைவர் சுதாமனோகர் உள்ளிட்டோர் விருது வழங்கி கெளரவித்தனர். இதே போல் ரோட்டரி சங்கம் சார்பில், மலைவாழ் மக்களுக்கு 10 சென்ட் நிலம் தானமாக வழங்கிய பி.ஆர்.செளந்திரராஜன், பி.நடராஜன் ஆகியோருக்கு கொடைவள்ளல் இவ்விழாவில் விருது வழங்கப்பட்டது. மேலும் ராசிபுரம் சுற்றுப்பகுதியை சேர்ந்த அரசு பள்ளிகளுக்கு புத்தகம் வைப்பதற்காக 15 பீரோக்களும் ரோட்டரி சங்கம் சார்பில் கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்பட்டது. இவ்விழாவில் ரோட்டரி சங்கம், இன்னர்வீல் நிர்வாகிகள், அரசு பள்ளி ஆசிரியர்கள் என பலரும் பங்கேற்றனர். விருது பெற்றவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!