நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தலைவர் வரதராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டார்.
சங்க செயலாளார் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
துணைத் தலைவர்கள் தர்மலிங்கம்,லோகேந்திரன்
இணைச் செயலாளர்கள் ஹரி, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் மல்லீஸ்வரன் நன்றி தெரிவித்தார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…
நழிவடைந்து வரும் ரிட்ரேடிங் தொழிலை காக்க மின்சார கட்டணத்தில் சலுகை தர வேண்டும்.
ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
மூலப் பொருட்களின் விளைவு உயர்வை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திரளான உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.