Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை"- சேலம் ஆட்சியர்

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை”- சேலம் ஆட்சியர்

சேலம் மாவட்டத்தில் சீரான குடிநீர் வழங்குதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று (பிப்.05) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, “சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் 10 கூட்டுக் குடிநீர் திட்டங்களின் வாயிலாக நகராட்சிகள் 29 பேரூராட்சிகள் மற்றும் 4,475 ஊரக குடியிருப்புகளுக்கு நாள்தோறும் சராசரியாக 177 மில்லியன் லிட்டர் குடிநீர் 29.21 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ரூபாய் 652.54 கோடி மதிப்பீட்டில் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர் ஆகிய 4 பேரூராட்சிகள், இடங்கணசாலை நகராட்சி மற்றும் வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, சேலம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 778 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட ஒரு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் நாளொன்றுக்கு 53.23 மில்லியன் லிட்டர் அளவுக்கு குடிநீர் 5.23 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டு இத்திட்டம் சோதனை ஓட்டத்தில் உள்ளது.

திட்ட மதிப்பீடு

மேலும், ரூபாய் 30.58 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டம், ஆலாம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் நீர் ஒதுக்கீட்டில் இருந்து ஒரு பகுதியாக சேவ மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்கு நான்தோறும் 1.827 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் 28,000 மக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ரூபாய் 12.70 கோடி மதிப்பீட்டில் சேல்ம் மாவட்டம் ஏற்காடு மற்றும் ஏற்காடு ஊராட்சிக்குட்பட்ட 8  குடியிருப்புகளுக்கான புதிய குடிநீர் திட்டம் 16,000 மக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் தற்பொழுது முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூபாய் 342.41 கோடி மதிப்பீட்டில் ஊரக பகுதிகளில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு வழங்கப்படும் குடிநீர் அளவினை 40 லிட்டரில் இருந்து 55 லிட்டர் ஆக உயர்த்தி வழங்கும் வகையில் சேலன் மாவட்டத்தில் வாரிய பராமரிப்பிலுள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய தேசிய ஐல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் ஒரு பணியான இராசிபுரம் எடப்பாடி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் தற்பொழுது முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நான்கு திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது

இத்திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி மறுசீரமைப்புப் பணிகளை முடித்து, கோடை காலத்திற்கு முன்னதாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் உரிய அளவு சீரான குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.” இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!