நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டியில் RS கேர் பவுண்டேஷன் எனும் குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தின் திறப்புவிழா நடைபெற்றது. பவுன்டேஷன் நிர்வாகி ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
நாமக்கல் நகர தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மனோகரன், KC பவுண்டேஷன் நிறுவனர் ஜெகன், பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், இணை செயலாளர் தேவி உதயகுமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராயல் பத்மநாபன், இணை செயலாளர் எவரெஸ்ட் ராஜா, மார்க்கெட் சங்க செய்தி தொடர்பாளர் ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.