நாமக்கல், கடைவீதியில் ஶ்ரீ விஷ்ணு ஜுவல்லர்ஸ் எனும் புதிய நகைக்கடை ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு நிறுவன உரிமையாளரும், நாமக்கல் நகர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவருமான விஸ்வநாதன் மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்வில் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராயல் பத்மநாபன், இணை செயலாளர் எவரெஸ்ட் ராஜா, இணை அமைப்பாளர் ரிஸ்வான் ஆகியோர் கலந்துகொண்டனர்.