Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரத்தில் சர்வதேச போலியோ தினம்: ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் 1000க்கும்...

ராசிபுரத்தில் சர்வதேச போலியோ தினம்: ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போலியோ விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சர்வதேச போலியோ தினத்தை தொடர்ந்து ரோட்டரி சங்கங்களின் ஏற்பாட்டில் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற போலியோ தடுப்பு விழிப்புணர்வு குறித்து பேரணி நடைபெற்றது. முன்னதாக ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன்பாக தொடங்கிய பேரணியில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தம் தலைமை வகித்தார். ராசிபுரம் டிஎஸ்பி., எம்.விஜயகுமார், ராசிபுரம் நகர மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், மாவட்ட ரோட்டரி ஆளுநர் சிவக்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

போலியோ இல்லாத உலகம் படைப்போம், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டுவோம், ஊனம் இல்லாத சமுதாயம் உருவாக்குவோம் என்பன போன்ற விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு பள்ளி மாணவ மாணவியர் பேரணியில் பங்கேற்றனர். இப்பேரணி நாமக்கல் சாலை, பழைய பேருந்து நிலையம், கவரைத்தெரு கடை வீதி, ஆத்தூர் சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவு சென்றடைந்தது. பின்னர் போலியாவை முடிவுக்கு கொண்டு வருவோம் என பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், ரோட்டரி நிர்வாகிகள் ஒன்று திரண்டு உறுதியேற்றனர்.

விழிப்புணர்வு பேரணியில் ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம், ராசிபுரம் எஜூகேசனல் சிட்டி ரோட்டரி கிளப், ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல், இன்னர் வீல் சங்கம் போன்றவற்றின் நிர்வாகிகள், அரசு, தனியார் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் என பலரும் பங்கேற்றனர்.

இப்பேரணியில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தம், செயலர் கே.ராமசாமி, ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் எம்.பூபாலன், ராசிபுரம் எஜூகேசன் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் எஸ்.திருமுருகன், மாவட்ட பப்ளிக் இமேஜ் சேர்மேன் ஆர்.திருமூர்த்தி (எ) ரவி,ரோட்டரி உதவி ஆளுநர் கு.பாரதி, முன்னாள் உதவி ஆளுநர்கள் டாக்டர் எம்.ராமகிருஷ்ணன், கே.கே.வி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சத்தியமூர்த்தி, எஸ்.பிரகாஷ், கே.குணசேகர், கே.ரவி, ஏ.ராஜூ உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!