Tuesday, December 24, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeதகவல்கள்தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நகராட்சிக்கு 100-க்கணக்கான மனுக்கள் -பத்து ரூபாய் இயக்கம் மனு...

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நகராட்சிக்கு 100-க்கணக்கான மனுக்கள் -பத்து ரூபாய் இயக்கம் மனு அனுப்பும் போராட்டம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பொது அலுவலருக்கு பல்வேறு தகவல்களை கேட்டு பத்து ரூபாய் இயக்கம் மனு அனுப்பும் போராட்டம் செய்து வருகிறது.


ராசிபுரம் நகராட்சி சார்பில் சாலை பராமரிப்பு, சுகாதார பராமரிப்பு, குடிநீர் வினியோகம், பிறப்பு இறப்பு பதிவு, பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு, மனைப்பிரிவு அனுமதி, வீட்டு வரி விதிப்பு, சொத்து மற்றும் தொழில் வரி விதிப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நகராட்சியின் ஆன்லைன் தளத்தில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. பல்வேறு கோப்புகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. பொதுமக்களின் பல மனுக்கள், அனுமதிகள் பதிவேடுகளில் பதியப்படவில்லை. இந்நிலையில், நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறைகளில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பத்து ரூபாய் இயக்கம் பல்வேறு தகவல்களையும் தகவல் அறியும் உரிமை சட்டம்-2005-ன் கீழ் கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சென்னை, திருவள்ளூர்,விழுப்புரம்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி,திருவண்ணாமலை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பத்து ரூபாய் இயக்கத்தினர் நகராட்சி பொது தகவல் அலுவலருக்கு பல்வேறு தகவல்கள் கேட்டு 100-க்கணக்கான மனுக்கள் கடந்த மே மாதம் அனுப்பியுள்ளனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்டு அனுப்பட்டுள்ள மனுக்கள் மீது நகராட்சி உரிய தகவல்கள் தரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மேல் முறையீட்டு மனுவும் 100-க்கணக்கில் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கும் உரிய பதில் தரப்படவில்லை எனில், தமிழகம் முழுவதும் உள்ள இயக்கத்தினர் 1000 மனுக்களை அனுப்பும் போராட்டம் விரைவில் நடத்துவார்கள் என பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான நல்வினை விஸ்வராசு தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!