நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப .மகேஸ்வரி தலைமையில் அரசு /அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருச்செங்கோடு கே .எஸ் .ஆர்.கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை (பொறுப்பு ) க .விஜயன், உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் – ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி செல்லா குழந்தைகள் இடைநின்ற குழந்தைககளை தொடர்ந்து படிக்க வைக்க என்ன முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் -கற்றல் கற்பித்தலை மேம்படுத்துவதற்காக ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் செய்ய வேண்டிய முயற்சிகள். பள்ளி மேலாண்மை குழுவின் பணிகள். பள்ளி மேலாண்மை தகவல் மையத்தில் EMIS பதிவிடுவதில் அவசியம், நலத்திட்ட உதவிகள் கல்வி உதவித்தொகை வழங்குதல் சார்ந்த விழிப்புணர்வு
மற்றும் நம் பள்ளி நம் பெருமை திட்டத்தின் கீழ் நிதி திரட்டுவதின் முக்கியத்துவம். அந்த விதியை எவ்வாறு பயன்படுத்துவது பள்ளிகளில் தேர்ச்சி விழுக்காடுஎவ்வாறு அதிகரிப்பது பள்ளியில் வளாகம் சுற்றுப்புறம் வகுப்பறை தூய்மையை பேணுவது. பள்ளிகளில் இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி, பாலியல் விழிப்புணர்வு குழு ஏற்படுத்துவது சாலை பாதுகாப்பு மன்றம்.
ஆன்ட்டி டிரக் கிளப் Antidrug Club போதை பொருள் விழிப்புணர்வு குழு செயல்பாடு போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆய்வு கூட்டத்தை முதன்மைக் கல்வி அலுவலர் ப .மகேஸ்வரி பேசினார்.
2023 -24 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்ச்சி விழுக்காட்டில் 100 சதவீதம் பெற்றுக் கொடுத்த 49 பள்ளிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு பள்ளித் துணை ஆய்வாளர்கள் கை.பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்ஏற்பாடு செய்திருந்தனர்.