நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியின் புதிய ஆணையாளராக எஸ்.கணேஷ் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். திருச்செங்கோடு நகராட்சியின் ஆணையாளர் கி.சேகர், ராசிபுரம் நகராட்சியின் பொறுப்பு ஆணையாளராக இருந்து வந்தார். தற்போது மதுரை மாவட்டம் மேலூர் 2-ம் நிலை நகராட்சியின் ஆணையாளராக இருந்து வந்த எஸ்.கணேஷ், பதவி உயர்வு பெற்று ராசிபுரம் நகராட்சியின் புதிய ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து நகராட்சியில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். புதிய ஆணையாளருக்கு நகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரன், வருவாய் அலுவலர், மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ராசிபுரம் நகராட்சியின் குடிநீர், சுகாதாரம்,சாலை, தெரு மின்விளக்கு போன்ற அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவேன். பொதுமக்கள் நகரின் மேம்பாட்டிற்கான பணிகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ராசிபுரம் நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு
RELATED ARTICLES