கல்லூரியின் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்து கூறி ஏமாற்றி வந்த நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி உதவிப் பேராசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி சைல்டு லைனில் செய்த புகாரின் பேரில் வி்சாரித்து போலீஸார் நடவடிக்கை.
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி உதவிப் பேராசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் திருச்சி சாலை தில்லை நகரைச் சேர்ந்தவர் பிரதாப் (44). இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம். இவர் நாமக்கல் லத்துவாடியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் பிரிவில் உதவிப் பேராசிரியராக கடந்த 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் கல்லூரி மாணவி ஒருவரை திருமண ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பாக அம்மாணவி நாமக்கல் சைல்டு லைனில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் சைல்டு லைன் அமைப்பு மற்றும் நாமக்கல் காவல் துறையினரும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மாணவியின் புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கல்லூரி பேராசிரியர் பிரதாப்பை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.