Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைதிருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா

திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, (தன்னாட்சி) மற்றும் கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.சீனிவாசன் வாழ்த்திப் பேசினார். கல்லூரித் துணைத் தலைவர்கே.எஸ்.சச்சின் தலைமை வகித்தார்.

கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் வி.மோகன், முதன்மைத் திட்ட அலுவலர் முனைவர் பாலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர்கள் வே.பத்மநாபன், மா.கார்த்திகேயன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். விழாவில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியது: நாம் வாழ்வில் மூன்று முக்கிய செயல்களை பின்பற்றினால் வெற்றி பெறலாம். அவை ‘அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் நாள்முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்க முடியும். தினமும் பிராணாயாமம் செய்வதன் மூலம் நமது வாழ்நாளை அதிகரிக்க முடியும். மன அமைதிக்காக தியானம் செய்வது’ போன்றவற்றை பின்பற்றிட வேண்டும். மேலும் சமுதாயத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.

இதனை தொடர்ந்து பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ராஜகுமார் மிட்டல் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழாவில் பேசுகையில், மாணவ-மாணவிகள் தங்களுக்கு என்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு உடல், மனம், அறிவு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து வாழ்க்கையின் குறிக்கோள்கள் மற்றும் வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்று கூறினர். விழாவில் தன்னாட்சிக் கல்லூரியைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இருவர், தன்னாட்சிக் கல்லூரியில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த 29 மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும் முதுநிலை அறிவியல் மற்றும் கலை பிரிவைச் சேர்ந்த 171 மாணவ, மாணவிகளுக்கும், இளநிலை அறிவியல் மற்றும் கலை பிரிவைச்
சேர்ந்த 1008 மாணவ, மாணவிகளுக்கும், கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பெரியார் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் வென்ற 2 மாணவிகளுக்கும், பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த 13 மாணவிகளுக்கும், கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற 10 மாணவிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இளநிலை மற்றும் முதுநிலை துறையைச் சார்ந்த 410 மாணவிகளுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பட்டமளிப்பு விழா உறுதிமொழியேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!