நாமக்கல் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அண்ணா 116-வது பிறந்த தின விழாப் பொதுக்கூட்டம் மற்றும் நலஉதவிகள் வழங்கும் விழா சிங்களாந்தபுரம் பகுதியில் நடைபெற்றது.
அனைத்துப் பகுதியிலும் பொதுக்கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட வேண்டுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி .தினகரன் கட்சியினருக்கு அறிவிறுத்தியிருந்தார். இதன்படி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ராசிபுரம் கிழக்கு ஒன்றியச் செயலர் வி.ராஜா வரவேற்றார். நாமக்கல் வடக்கு மாவட்டச் செயலர் ஏ.பி.பழனிவேல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் போன்ற நலஉதவிகளை வழங்கினார். பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.பி. பழனிவேல், பேரறிஞர் அண்ணா அரசியல் வரலாறு, அவரைப் பின்பற்றி அரசியலுக்கு வந்த எம்ஜிஆர். ஜெயலலிதா போன்றோர் குறித்தும் அவர்களது ஆட்சியின் திட்டங்கள் குறித்தும் பேசினார். இதனை தொடர்ந்து அரசியல் களத்தில் உள்ள கட்சியின் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் குறித்தும் அவர் பேசினார்.பின்னர் திரளான பெண்களுக்கு விழாவில் சேலைகள் வழங்கப்பட்டு ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக பொதுக்கூட்ட மேடை அருகே இருந்த எம்ஜிஆர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர் திருஉருவ சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த பொதுக்கூட்ட விழாவில் அமமுக மாவட்டபொருளாளர் பி.அன்புச் செழியன், பொதுக்குழு உறுப்பினர் டி. உதயகுமார், மாவட்ட துணைச் செயலாளர் பி.அம்பிகா, முன்னாள் இணைச் செயலாளர் இ.கே.திலகம், ராசிபுரம் கிழக்கு நகரச் செயலாளர் டி. தர்மராஜ், ராசிபுரம் மேற்கு நகர கழகச் செயலாளர் எம். பூபதி, ராசிபுரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் என்.கே.கே. பாலசுப்பிரமணியம், நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பராயன், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் டி. சதீஷ்குமார், வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், எருமப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் என்.ஜெகநாதன், நாமகிரிப்பேட்டை பேரூர் செயலாளர் சி. பெரியசாமி, பட்டணம் பேரூர் செயலாளர் ரஞ்சித், சேந்தமங்கலம் பேரூர் செயலாளர் முருகேசன், புதுப்பட்டி பேரூர் செயலாளர் பி. வெங்கடாசலம், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் செயலாளர் எஸ். மகேந்திரன், ராசிபுரம் ஒன்றிய அவைத்தலைவர் வி. பாலசுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதி எம். ஆனந்தவள்ளி மெகஸ்தனிஸ், ஒன்றிய துணைத் தலைவர் எம். பிரபு, ஊராட்சி செயலாளர் போடிநாயக்கன்பட்டி கே. குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.