Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம்: ராசி இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் 6-வது இன்ட்ராக்ட் கிளப் தொடக்கம்

ராசிபுரம்: ராசி இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் 6-வது இன்ட்ராக்ட் கிளப் தொடக்கம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ராசி இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் 2024-25 ஆண்டிற்கான 6-வது இன்ட்ராக்ட் கிளப் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் M.முருகானந்தம் தலைமை வகித்தார். ராசிபுரம் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரும், ரோட்டரி மேஜர் டோனருமான S.சத்தியமூர்த்தி முன்னிலையி வகித்தார். 2023-24-ம் ஆண்டின் இன்ட்ராக்ட் கிளப் மாணவி பேபிகா வரவேற்று கடந்த ஆண்டின் அறிக்கையை வாசித்தார்.

இளைஞர்கள் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்திட முடியும்:

இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் வி.சிவகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் பேசிய அவர் மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே இது போன்ற சமுதாய இயக்கங்களில் தங்களை இணைத்துக்கொண்டு சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பக்குவம் பெற வேண்டும். இளைஞர்களால் தான் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியும் என்பதால், இந்த பருவத்திலேயே பல சமுதாய பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் மாவட்ட இன்ட்ராக்ட் கிளப் சேர்மேன் சுவாதி ரவிக்குமார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், மாணவ மாணவியர்கள் இது போன்ற இயக்கங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதின் மூலம், தங்களது தகுதிகளை மேம்படுத்திக்கொள்ளவதுடன், தனி திறன்களையும் வளர்த்துக்கொள்ள முடியும். மேலும் ரோட்டரி சங்கத்துடன் இணைந்த ரோட்ராக்ட் உலகளாவிய இயக்கம் என்பதால் தங்களது தொடர்பு எல்லைகளை விரிவுப்படுத்திக்கொள்ள இயலும். இதன் மூலம் பல்வேறு நாடுகளில் உள்ள ரோட்ராக்ட் குழுக்களுடன் தொடர்பில் சென்று கல்வி,கலாச்சாரத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். ராசிபுரம் ரோட்டரி கிளப் இன்ட்ராக்ட் பொறுப்பாளர் எஸ்.கதிரேசன் ஆகியோர் இன்ட்ராக்ட் கிளப் முக்கியத்துவம் பற்றி பேசினர்.

பள்ளி முதல்வர் D.வித்யாசாகர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் புதியதாக பொறுப்பேற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துப் பேசினார்.
பள்ளியின் 2024-25-ம் ஆண்டின் புதிய இன்ட்ராக்ட் கிளப் தலைவராக பி.தேஜா, செயலராக பி.கே.தேன்தமிழ், பொருளாளராக எஸ்.தாரணிஷ் ஆகியோர் இன்ட்ராக்ட் பின் அணிவிக்கப்பட்டு பொறுப்பேற்றனர். இதனை தொடர்ந்து மாணவ மாணவியர்களுக்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் ரோட்டரி ஆர்.திருமூர்த்தி (எ) ரவி, ரோட்டரி மாவட்டச் செயலர் பாபு, முன்னாள் மண்டல உதவி ஆளுநர் கே.ஜெகந்நாதன், நிர்வாகிகள் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், இ.என்.சுரேந்தின், பி.கண்ணன், ராஜா, எஸ்.ஆனந்தகுமார், ஆர்.கிருபானந்த், மஸ்தான், எல்.சிவக்குமார், போராசிரியர் ஆர்.சிவக்குமார், டி.பி.வெங்கடாஜலபதி, ஜி.தினகர் உள்ளிட்ட ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவியர் கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!