ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா அண்மையில் நடைபெற்றது. ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற விழாவில் சங்கத் தலைவர் எம். முருகானந்தன் தலைமை வகித்தார். செயலாளர் கே. ராமசாமி அறிக்கை வாசித்தார்.
விழாவில் ரோட்டரி மாவட்டக் கல்வி குழுத் தலைவர் ஏ.வெங்கடேஸ்வரா குப்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், வெண்ணந்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் 8 ஆசிரியர்கள், நாமக்கல் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இரு பேராசிரியர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
விருதுகள் பெற்ற ஆசிரியர்களை ரோட்டரி உதவிஆளுநர் கு.பாரதி, ரோட்டரி மாவட்டம் மகிழ்வு பள்ளிகள் தலைவர் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம் ஆகியோர் பாராட்டிப் பேசினர். இதே போல் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் குடும்பங்களை சார்ந்த ஆசிரியர்களுக்கு விழாவில் கெளரவிக்கப்பட்டு நினைவுப் பரிசளிக்கப்பட்டனர். முடிவில் 2025-26 ஆம் ஆண்டின் தலைவர் (தேர்வு) என்ஜினியர் இ.என். சுரேந்திரன் நன்றி கூறினரார்.
திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இன்ட்ராக்ட்,ரோட்ராக்ட் கிளப் துவங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ந்து ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர். வி.சதாசிவம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
2023- 24 ஆம் ஆண்டின் ரோட்ராக்ட் தலைவர் எஸ். யோகேஷ் தனது ஆண்டின் செயல் திட்டங்களை வாசித்து 2024- 25 ஆம் ஆண்டு தலைவர் எஸ். குருசிவாவிற்கு காலர் மாற்றி பின் அணிவித்தார். பின்னர் புதிய ரோட்ராக்ட் சங்கத் தலைவர் குரு சிவா ஏற்புரை நிகழ்த்தினார். புதிதாக பதவியேற்ற நிர்வாகிகளை திருவள்ளுவர் அரசுக் கல்லூரியின் முதல்வர் எஸ்.பானுமதி, ராசிபுரம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கே.எஸ். கருணாகர பன்னீர்செல்வம், ரோட்டரி மாவட்ட ரோட்ராக்ட் சேர்மன் ஜேம்ஸ் ஆரோக்கியசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முடிவில் செயலாளர் ஜி திலகராஜ் நன்றி கூறினார்.
விழாவில் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த ஜி தினகர், நடராஜ், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ஆர். சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கணித துறை வளாகம் முன்பு மரக்கன்றுகளை மாவட்ட ரோட்ராக்ட் சேர்மன் ஜேம்ஸ் ஆரோக்கியசாமி, ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.முருகானந்தன், கல்லூரி முதல்வர் எஸ்.பானுமதி ஆகியோர் நட்டு வைத்தனர்.