Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்இட ஒதுக்கீடு கோரிக்கை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திட நவசமாஜ் அமைப்பு முடிவு

இட ஒதுக்கீடு கோரிக்கை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திட நவசமாஜ் அமைப்பு முடிவு

தமிழகத்தில் இடஒதுக்கீடு கோரிக்கையை அமல்படுத்த அரசியல் ரீதியாகவும் மற்றும் சட்ட ரீதியாகவும் தொடர் போராட்டங்களை நடத்த நவசமாஜ் அமைப்பு முடிவு செய்துள்ளது.

சென்னை தி.நகரில் நவசமாஜ் அமைப்பின் மாநில செயற்குழு குழு கூட்டம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில தலைவர் போராசிரியர் அன்பானந்தம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநில செயலாளர் பன்வார், பொருளாளர் சேகர் பாபு, டாக்டர் ராமலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் பல கோடி எண்ணிக்கை கொண்ட மருத்துவகுல சமூகம் வாக்காளர்களாக இருந்தும், அரசியல் மற்றும் அரசு உயர் பதவிகளில் இச்சமூகம் புறக்கணிப்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும், இழந்த அரசியல் அதிகாரத்தை பெறவும், அரசு வேலைகளில் உயர் பதவிகளில் இடம்பெரும் வகையிலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அரசு உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடிக்கு லட்சம் கடிதங்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், ஐ.டி.விங் அருண் குமார், சென்னை மாவட்டச் செயலாளர் முருகன், செயலாளர் பழனி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சிவராஜ், கரூர் மாவட்டத் தலைவர் விஜயன், மற்றும் மாநில நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், பல்வேறு மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!