ராசிபுரம் நகரில் அதிக போதையில் காரை தாறுமாறாக ஒட்டி வந்த இளைஞரால் பொதுமக்கள் அலறியடித்து சிதறி ஒடினர். ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து மதுபோதை தலைகேறியவாறு இளைஞர் ஒருவர் காரை ஒட்டி வந்தார். வழியில் காரை தாறுமாறாக ஒட்டி சென்ற அவரது காரை பார்த்து பலரும் அதிர்ந்தனர். பின்னர் இந்த காரை நாமக்கல் சாலையில் சென்றபோது சாலையோரை சாக்கடையின் திட்டின் மேல் ஏறி நிலை தடுமாறு இருசக்கர வாகனத்தின் குழந்தைகளுடன் வந்த ஒருவர் மீது மோதுவது போல் சென்றது. இதனால் பைக்கில் வந்தவர்கள் அதிர்ச்சியில் ஒதுங்கி நின்றனர். பொதுமக்கள் சத்தம் கேட்டு அந்த காரை ஒட்டி வந்தவர் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன்பு நிறுத்தினார். அவரை சூழ்ந்த பொதுமக்கள் தடுத்து அவரை கேள்வி கேட்டனர். ஆனால் மதுபோதை தலைகேறிய நிலையில் இருந்து அவர் பொதுமக்களிடம் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாத என வாக்குவாதம் செய்தார். பின்னர் போலீஸார் சம்பவ இடம் வந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அதிக போதையில் இருந்ததால், போலீஸார் அவரது காரை எடுத்துக்கொண்டு அவரையும் அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றனர். போதையில் இருந்த அந்த இளைஞர் சேலம் செவ்வாய்ப்பேட்டை என்பதும் அவரது பெயர் சபரிநாதன் என்பதும் தெரியவந்தது. அவர் ராசிபுரத்தில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க வந்துவிட்டு குடும்ப பிர்சசனையால் அதிக மது குடித்துவிட்டு காரில் தாறுமாறாக சென்றது தெரியவந்தது. மேற்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதையில் தாறுமாறாக காரை ஒட்டி வந்த இளைஞரால் பொதுமக்கள் அலறி ஒட்டம்
RELATED ARTICLES