Tuesday, December 24, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்நாமக்கல் அருகே பள்ளி மாணவர்களிடையே மோதல் - ப்ளஸ் 1 மாணவர் உயிரிழப்பு

நாமக்கல் அருகே பள்ளி மாணவர்களிடையே மோதல் – ப்ளஸ் 1 மாணவர் உயிரிழப்பு

நாமக்கல் அடுத்த எருமப்பட்டி அருகே நவலடிப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்.டிரைவராக உள்ளார். இவரது மகன் ஆகாஷ் (16). வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். ஆகாசுக்கும் அவருடன் படிக்கும் சக மாணவரான எருமப்பட்டி அருகே உள்ள செல்லியம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் ரித்தீஷ் (16) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதுது. இதில் ஆத்திரமடைந்த ரித்தீஷ், ஆகாஷை தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ஆகாஷ் பள்ளி வளாகத்திலேயே மயக்கம் அடைந்து விழுந்து உள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது பிரேதம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!